நுவரெலியாமலையகம்

நுவரெலியா பம்பரகலையில் கூப்பன் முறையில் காஸ் விநியோகிக்க ஏற்பாடு!

நுவரெலியா பம்பரகலையில் எரிவாயு சிலிண்டர்களை கூப்பன் முறை மூலம் வழங்குவதற்கு நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஊடாக தீர்மானித்துள்ளனர்.இதற்கமைய நுவரெலியாவில் உள்ள அனைத்து கிராமசேவகர் பிரிவிலும் வரும் ஜூலை மாதம் தொடக்கம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிராமசேவகர் உறுதிப்படுத்தப்பட்ட முத்திரையோடு கூப்பனொன்றை வழங்கும் முறை ஆரம்பமாகின்றது.

முதற்கட்டமாக நுவரெலியா பம்பரகலையில் இன்று கூப்பன் அட்டை வழங்கப்பட்டது. இதனை பொது மக்கள் நீண்ட வரிசையில் இருந்து பெற்றுக்கொண்டனர்.
இக்கூப்பனை அனுமதி பெற்ற எரிவாயு விற்பனை முகவரிடம் மாத்திரம் கொடுக்கும் பட்சத்தில் அவருக்கான அம்மாதத்துக்கான எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் கையளிக்கப்படும் எனவும் விநியோகம் செய்யப்படும் தினத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இக் கூப்பன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை மூலம் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. அனைத்து குடும்பங்களுக்கும் மாதாந்தம் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button