செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியா பம்பரக்கலை தோட்ட மக்களும் ஹிஷாலினிக்கு நீதி கோரி போராட்டம்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதின் கொழும்பு இல்லத்தில் பணியாற்றிய மலையகத்தைச்சேர்ந்த டயகம சிறுமி ஜூட்குமார் ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி  கோரி மலையகத்தில் தொடர்ச்சியாக தோட்டப்பகுதிகளில் மக்கள் போராட்டங்களையும், ஆத்மசாந்தி பூசைகளையும் நடத்தி வருகின்றனர்.
       

அந்த வகையில் நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பம்பரகலை தோட்ட மக்களும் (03) செவ்வாய் கிழமை காலை தோட்டத்தின் கொழுந்து நிறுவையிடும் இடத்தில் நீதி கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
     

நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் ஆறுமுகம் விஜயகுமார் தலைமையில் தோட்ட மக்களால் இடம்பெற்ற போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு நீதி கோரிய கோசங்களை எழுப்பியதுடன் சிறுமியின் ஆத்மசாந்திக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Related Articles

Back to top button