அரசியல்செய்திகள்

நுவரெலியா பிரதேச சபையின் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்றுகின்றன..

டி சந்ரு

நுவரெலியா பிரதேச சபையின் நானுஓயா பிரதான காரியாலயம், கந்தப்பளை உப காரியாலயம் ஆகியவற்றின் கடமைகள் வழமைப்போலவே இடம்பெற்று வருவதாக நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதையடுத்து, அவருடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தன்னையும் சுகாதார பிரிவின் தனிமையில் இருக்குமாறு அறிவித்ததாகத் தெரிவித்தார்.

தான் தனிமைப்படுத்தலில் இருந்தபோதும் வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், நுவரெலியா பிரதேச சபையின் நடவடிக்கைகளுக்கு எந்த பாதகமும் ஏற்படவில்லை என்றும் சபையின் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சுகாதார வழிமுறைக்கு அமைவாக ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடமைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, பிரதேச சபையின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button