செய்திகள்நுவரெலியா

நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேச பாடசாலைகளுக்கு தவிசாளர் வேலு யோகராஜ் விஜயம்

நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் காணப்படும் அனைத்து பாடசாலைகளுக்கும் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் மேற்பார்வை செய்துவருகிறார்.

குறித்த மேற்பார்வை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் இதன் போது தவிசாளர் ஆராய்ந்து வருகின்றார்.

அதன் அடிப்படையில் இன்று (30) நானுஓயா நாவலர் கல்லூரி மற்றும் நானுஓயா நாவலர் ஆரம்பப் பாடசாலைகளுக்கு தனது விஜயத்தினை மேற்கொண்டு பாடசாலையின் சுகாதார நடைமுறைகள் பற்றி பாடசாலை நிறுவாகத்துடன் கலந்துரையாடியதோடு பாடசாலைக்கு தேவையான கொரோனா தொற்று நீக்கிகளும் வெப்பமானிகளும் தவிசாளரால் வழங்கி வைக்கப்பட்டன.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com