அரசியல்நுவரெலியாமலையகம்

நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜிக்கு கோவிட் தொற்று இல்லை ..

டி சந்ரு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள covid-19 கொரோனா வைரஸ் தொற்றானது நுவரெலியா மாவட்டத்தின் அக்கரபத்தனை பிரதேச சபைத் தவிசாளர் அவர்களுக்கு உறுதியானதன் காரணமாக கடந்த டிசம்பர் 17 அன்று கண்டியில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதனடிப்படையில் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டார்.

இன்று (30) மாலை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் W.R.M.மஹேன்ர செனவிரத்ன அவர்கள் தொலைபேசியின் ஊடாக நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களை தொடர்பு கொண்டு அவருடைய பி.சி.ஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதியாகவில்லை என தெரிவித்தார்.

Related Articles

Back to top button