செய்திகள்

நுவரெலியா- பொகவந்தலாவை செல்வகந்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்..

செல்வகந்தை திருவிடத்தில் கோயில் கொண்ட மாமணியே
ஆட்டிநிற்பாய் உலகினையே ஆட்சி செய்வாய் எங்களையே
எட்டுத்திக்கும் திருவருளை ஏற்றிவிடும் திருமகளே
மட்டில்லா நலன்கள் தரும் தாயே முத்துமாரியம்மா

எங்கும் இன்பம் நிறைந்துவிட ஈந்திடம்மா உன்னருளை
நம்பி நிற்கும் எங்களுக்குத் துணையாவாய் நீயன்றோ
சூலத்தைக் கையிலேந்தி காத்தருளும் பேரருளே
எமக்கு அருள் வழங்கிடவே விரைந்தோடிவா தாயே முத்துமாரியம்மா

பொகவந்தலாவை பெருநிலத்தில் குடியிருக்கும் கோமகளே
அழகுமிகு மலைநகரின் ஆட்சி நிலை உன்னதன்றோ
ஈழநல்ல நாட்டினிலே உரிமையுடன் நாம் வாழ
வழி செய்து வளமளிப்பாய் தாயே முத்துமாரியம்மா

கருணையுள்ளம் கொண்ட உந்தன் அரவணைப்பை நாடுகின்றோம்
சூழவரும் துன்பங்களை அகற்றியருள் தந்திடம்மா
அருகினிலே நீயிருக்க அச்சமெமக்கில்லையம்மா
காவல் செய்து நீயிருப்பாய் தாயே முத்துமாரியம்மா

அமைதியெங்கும் நிலைத்துவிட நாமெல்லாம் நலமடைய
இன்னல், பகை, கொடுமை இல்லாது ஒழிந்துவிட
ஆட்டிப்படைக்கின்ற அரக்கநிலைதான் அழிய
அம்மா உனைச் சரணடைந்தோம் தாயே முத்துமாரியம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com