...
செய்திகள்

நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் உள்ளிட்ட 23 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது..

நுவரெலியா  பொது வைத்தியசாலையில்கடமையாற்றும் வைத்தியர்ள் மற்றும் தாதிமார்கள் உள்ளிட்ட கனிஷ்ட பிரிவு வைத்திய ஊழியர்கள் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனிவிரட்ன தெரிவித்தார்.
       

வைத்தியர்கள் 3 பேரும் தாதியர்கள்13 பேரும் கனிஷ்ட பிரிவு வைத்திய ஊழியர்கள்7 பேருமாக 23 பேருக்கு  (23) திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொதுவைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
       

இவ்வாறு கொரோனா தொற்றுக் குள்ளான வைத்தியகள், தாதிமார்கள் உள்ளிட்ட கனிஷ்ட வைத்திய ஊழியர்கள்சிலர் நுவரெலியா பொது வைத்திய சாலையில் கொரொனா பிரிவு  வார்ட்டுகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
       

குறைந்த அறிகுறிகள் உள்ள சிலர் அவர்களின் வீடுகளிலே தனிமைப் படுத்ப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும்எவ்வாராயினும் தற்போது கடமையிலுள்ளவைத்தியர்கள் தாதிமார்கள் கனிஷ்ட வைத்திய ஊழியர்களை கொண்டு வைத்திய பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாகவும் வைத்தியசாலை  பணிப்பாளர் மேலும்தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen