செய்திகள்

நுவரெலியா-மகளீர் மற்றும் சிறுவர்கள் எதிரான வன்முறைகளில் இருந்து எவ்வாறு தடுப்பது தொடர்பான கலந்துரையாடல்..

மகளீர் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் இதனை கருத்திற்கண்டு  எதிர்காலத்தில் இவ்வாறான ஆபத்திலிருந்து அவர்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி .சில்வா தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் நேற்று (24/07) இடம்பெற்றது.

மேலும் மகளிர் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் நலன் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அங்கு உரையாற்றிய நான்  கொழும்பு மற்றும் வெளியிடங்களில் தொழில்புரியும் 18 வயதிற்கு குறைவானவர்களின் தகவல்களை திரட்டி எமது அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்திட்டத்தின் ஊடாக பல்வேறு திறன் அபிவிருத்தி பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவி்த்தேன்.  

இந் நிகழ்வில் அமைச்சர் C.B.ரத்னாயக்க , இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா , நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் S.P.திசாநாயக்க, நுவரெலியா  மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button