அரசியல்

நுவரெலியா- மரக்கறி தோட்ட உரிமையாளர்களையும், இரசாயன உர விற்பனையாளர்களையும் சந்தித்த இராஜாங்க அமைச்சர் ..

நுவரெலியாவிலுள்ள மரக்கறி தோட்ட உரிமையாளர்களும் இரசாயன பசளை (உரம்) விற்பனையாளர்களுக்கும்  இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்குமிடையிலான  விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது. 


இதன்போது அண்மையிலே இரசாயன பசளை இடைநிறுத்தப்பட்டதையடுத்து மரக்கறி தோட்ட உரிமையாளர்களும் இரசாயன பசளை விற்பனையாளர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இவ்விடயம் தொடர்பாக குறித்த அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

மேலும் இவ்விடயம் தொடர்பாக உரிய அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன,இ.தொ.கா வின் தேசிய அமைப்பாளர் ராஜதுரை, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் யோகராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com