செய்திகள்

நுவரெலியா- மஸ்கேலியா அருள்மிகு சண்முகநாத சுவாமி திருக்கோயில்..

 
அருள்மழை பொழியும் திருமுகம் கொண்ட சண்முகநாதா
மருள் களைந்தெமக்கு நல்லருள் வழங்க வருவாயே
பகை கொண்ட உள்ளம் நிலைத்திடாதிருக்க உளமதைப் பக்குவம் செய்து அருள்வாயே
இயற்கை எழில் நிறை இடத்தினிலமர்ந்த சண்முகநாதா
எங்கும் நிம்மதி நிலைத்திடவருள் செய்ய வருவாயே
துன்பங்கள் எம்மை அண்டாதிருக்கவே
துணையிருந்தெம்மை காவல் செய்து அருள்வாயே
மலைகள் சூழ் மஸ்கேலியா நகரமர் சண்முகநாதா
வளம் நிறை வாழ்வைத் தந்திட நீயும் வருவாயே
வேற்றுமை களைந்து ஒன்றுபட்டுயரவே
தெளிந்த நல்லறிவைத் தந்து அருள்வாயே
தேயிலை மலை சூழ் திருவிடத்துறையும் சண்முகநாதா
தோல்விகளில்லா பெரு நிலையளித்திட வருவாயே
தொல்லை தரும் துன்பங்கள் சூழாதிருக்கவே
வழியமைத்தெமக்கு துணையிருந்து அருள்வாயே
மத்திய மாகாணத்தில் மகிழ்வுடனிருந்தருள் சண்முகநாதா
தமிழ் மொழி வளம் பெற வழிதர வருவாயே
மலையகமெங்குமே தமிழ் மணம் நிறைந்திட
வளம்தந்து வாழ்த்தி அணைத்தே அருள்வாயே
வேடுவன் மகளை அருகினில் கொண்ட சண்முகநாதா
இந்திரன் மகளையும் பக்கமிருத்தி வருவாயே
பாமர மக்களை எத்திப் பிழைப்போர் அழிவுபட
ஏற்றவை செய்து காத்தருளி நீயும் அருள்வாயே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen