Breaking Newsசெய்திகள்மலையகம்

நுவரெலியா, மாத்தளை உட்பட 12 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்.!

நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம், கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு, கழுத்துறை, அம்பாறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 மாவட்டங்களைச் சேர்ந்த 82 கிராம சேவகர் பிரிவுகள் நாளை காலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is coronavirus-curfew-.jpg

Related Articles

Back to top button