...
செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியா மாநகர சபை தலைமையில் மதில் சுவர் அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

டி.சந்ரு செ.திவாகரன்
அரசாங்க அனர்த்த முகாமைத்துவம் திணைக்களத்தின் 50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நுவரெலியா மாநகர சபை தலைமையில் மதில் சுவர் அமைக்கும் வேலைத்திட்டம் நடை பெற்று வருகின்றது.

கடந்த ஒட்டோபர் மாதம் தொடர்ந்து  பெய்த பலத்த மழையினால் நுவரெலியா பிரதான பஸ்தரிப்பிடத்திற்கு பின் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் அடிக்கடி வெள்ள நீர் உட்புகுந்து பொருட்களுக்கும் ,வியாபாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணம் வர்த்தகரின் நலன் கருதி இவ் மதில் சுவர் அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக அதிக மழையுடனான காலநிலை நிலவும் போது இப்பகுதியில் நீர் மட்டம் அதிகரித்து வர்த்தக நிலையங்களும் சேதம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button


Thubinail image
Screen