செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தின் 5 பிரதேச செயலகங்கள் 10ஆக அதிகரிக்கப்பட்டமை வரலாற்று முக்கிய விடயமாகும்

நுவரெலியா மாவட்டத்தின் 5 பிரதேச செயலகங்கள் 10ஆக அதிகரிக்கப்பட்டமை தமிழ்
முற்போக்கு கூட்டணியின் மற்றுமொரு சானக்கிய அரசியல் நகர்வு.

மலையக மக்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளும் பிரதேச
செயலகங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பல சாராரும் பல்வேறான கோரிக்கைகளை
முன்வைத்து வந்தனர். ஆனாலும் இந்த மக்கள் கோரிக்கை பல அரசியல் தரப்பினராலும்
முன்னெடுக்கப்படுவதாக பாசாங்கு காட்டப்பட்டாலும் அதற்கான நகர்வுகள் வெறும்
வரைபாகவே காணப்பட்டது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வலுத்த கோரிக்கை
காரணமாக 2018ம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்பதாக நுவரெலியா
மாவட்டத்தில் பிரதேச சபைகள் அதிகரிப்பட்டன. அம்பகமுவை பிரதேச சபையானது
நோர்வூட் பிரதேசசபை, மஸ்கெலியா பிரதேசசபை, அம்பகமுவை பிரதேசசபை எனவும்
நுவரெலியா பிரதேச சபையானது கொட்டகலை பிரதேச சபை, அக்கரபத்தனை பிரதேச சபை,
நுவரெலியா பிரதேச சபை எனவும் பிரிக்கப்பட்டு நான்கு பிரதேச சபைகள் புதிதாக
உருவாக்கபட்டன. இதனை உரிமைசார் வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகிற அதேவேளை
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.

பிரதேசசபைகள் போன்ற உள்ளுராட்சிமன்றங்கள் அரசியல் நிறுவனங்களாகும். இதனூடாக
மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து அவர்களினூடாக தங்களின் அரசியல்,
அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கமுடியும். இருப்பினும் அரச பொறிமுறையூடாக
செயற்பட பிரதேச செயலகங்கள் என்ற கட்டமைப்பு இன்றியமையாததாகும். துரதிஸ்டவசமாக
எமது நாட்டில் இந்த கட்டமைப்பு வெவ்வேறானதாக மக்கள் தொகையினை கொண்டிருப்பது
கவனத்திற்குரியது. ஏறத்தாழ 10000 மக்கள் தொகையினருக்கு ஒரு பிரதேச செயலகம்
என காணப்படுகின்ற அதேவேளை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையினருக்கு
ஒரு பிரதேச செயலகம் என்ற நிலைமையும் காணப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவை பிரதேச செயலகத்திற்குட்பட்ட
பிரதேசத்தில் 222,014 (2019ம் ஆண்டு வரையான நுவரெலியா மாவட்ட செயலகத்தின்
புள்ளிவிபரத்தின்படி) மக்களுக்கு ஒரு பிரதேச செயலகமும், அம்பகமுவை பிரதேச
செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 228,890 (2019ம் ஆண்டு வரையான நுவரெலியா
மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரத்தின்படி) மக்கள் தொகையினருக்கு ஒரு பிரதேச
செயலகமும் அமைந்துள்ளது.

அம்பகமுவை, நுவரெலியா தவிர்ந்து கொத்மலை 109,193 மக்கள் தொகையும்
ஹங்குராங்கெத்தை 95,539 மக்கள் தொகையும் வலப்பனை 112,364 மக்கள் தொகையும்
காணப்படுகின்றன.

இலங்கையிலேயே மிகப்பெரிய கிராம சேகவர் பிரிவு அம்பகமுவை பிரதேச செயலகத்திலேயே
காணப்படுகிறது. 319 ஜி கெர்கஸ்வோல்ட் (319 G – Kirkoswald) எனும் கிராம சேவக
பிரிவில் 10,954 மக்கள் வாழ்கின்றார்கள். இத்தகைய பாகுபாட்டின் காரணமாக அரச
வளங்களின் பகிர்ந்தளிப்பின்போது பாகுபாடுகள் காணப்படுவதும் தவிர்க்கவியலாது.
இவ்வாறான நிலையமையினை மாற்றியமைத்து எல்லை மீள்நிர்ணத்தினூடாக கிராம சேவகர்
பிரிவுகள் மாற்றுவதும் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதும்
அவசியமென கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

இருப்பின் கடந்த அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் நகர்வு
காரணமாக சாத்தியமாக்கப்பட்டிருகின்றது. நுவரெலியா மாவட்டமானது 12 பிரதேச
செயலகங்களாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை தமிழ் முற்போக்கு
கூட்டணியின் தலைவர்கள் உள்நாட்டு அலுவலகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிடம்
கோரிக்கையினை 19.03.2016ம் திகதி முன்வைத்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போது
விரைவில் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்படும் என
உறுதியளித்திருந்தார்.

இதனை உறுதி செய்யும் வகையில்

இதற்கு பாராளுமன்றத்தில் பதிலளித்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அதற்கான
அமைச்சரவை பத்திரம் பாராளுமன்றத்தி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை
பத்திரம் 2019.05.08 அங்கீகரிக்கப்பட்டு அதிகரிப்பிற்கான அனுமதி
கிடைக்கப்பெற்றது.

இதனடிப்படையில் 2019.10.29ம் திகதி நுவரெலியா பிரதேச செயலக அதிகரிப்பு
தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 5ஆக இருந்த பிரதேச
செயலகங்கள் 10ஆக அதிகரிப்படுகிறது. நோர்வூட், தலவாக்கலை, கொத்மலை மேற்கு,
நில்தன்டாஹின்ன, மத்துரட்ட ஆகிய 5 பிரதேச செயலகங்கள் புதிதாக
உருவாக்கப்படவிருக்கின்றது. இது தமிழ் முற்போக்கு கூட்டணியின் மற்றுமொரு
சானக்கிய அரசியல் நகர்வாகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் 12 ஆக
அதிகரிக்கப்பட வேண்டுமென கோரிக்கையினை முன்வைத்திருந்தது. அம்பகமுவை பிரதேச
செயலகமானது அம்பகமுவை, நோர்வூட், மஸ்கெலியா என மூன்றாகவும் நுவரெலியா பிரதேச
செயலமானது நுவரெலியா, தலவாக்கலை, அக்கரபத்தனை என மூன்றாகவும் கொத்மலை பிரதேச
செயலகமானது கொத்மலை, பூண்டுலோயா என இரண்டாவும் ஹங்குராங்கெத்தை பிரதேச
செயலகமானது ஹங்குராங்கெத்தை, ஹோவாஹெட்ட என இரண்டாகவும் வலப்பனை பிரதேச
செயலகமானது வலப்பனை, ராகலை என இரண்டாகவும் அதிகரிக்கபட வேண்டுமென்பதே தமிழ்
முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையாக அமைந்திருந்தது. இருப்பினும் முதற்கட்டமாக
5 பிரதேச செயலகங்களே புதிதாக உருவாக்கப்படுகின்றது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதற்கமைய பின்வருமாரு பிரதேச செயலகங்கள்
அமைகின்றது.

1. அம்பகமுவை – 32 கிராம சேவகர் பிரிவுகள் – சனத்தொகை 46,578

2. நோர்வூட் – கிராம சேவகர் பிரிவுகள் 35 –
சனத்தொகை 175, 436

3. நுவரெலியா – கிராம சேவகர் பிரிவுகள் 28 –
சனத்தொகை 71,775

4. தலவாக்கலை – கிராம சேவகர் பிரிவுகள் 44 – சனத்தொகை 157,115

5. கொத்மலை கிழக்கு – கிராம சேவகர் பிரிவுகள் 47 – சனத்தொகை 66,831

6. கொத்மலை மேற்கு – கிராம சேவகர் பிரிவுகள் 49 – சனத்தொகை 42,362

7. வலப்பனை – கிராம சேவகர் பிரிவுகள் 62 –
சனத்தொகை 67, 450

8. நில்தண்டாஹின்ன – கிராம சேவகர் பிரிவுகள் 63 – சனத்தொகை 44,914

9. ஹங்குராங்கெத்தை – கிராம சேவகர் பிரிவுகள் 79 – சனத்தொகை 59, 756

10. மத்துரட்ட – கிராம சேவகர் பிரிவுகள் 52 –
சனத்தொகை 35,783

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் நகர்வுகளினூடாக தற்போதைய நிலையில்
பிரதேச செயலகங்கள் 5ஆக அதிகதித்தாலும் நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச
செயலகங்கள் மேலும் இரு பிரதேச செயலகங்களாக பிரிக்கப்பட வேண்டியது.
கட்டாயமானதாகும். தற்போதும் நோர்வூட் பிரதேச செயலகம் 175,436 மக்கள்
தொகையினையும், தலவாக்கலை பிரதேச செயலகம் 157,115 மக்கள் தொகையினையும்
கொண்டுள்ளது. அம்பகமுவை, நுவரெலியா தவிர்ந்த ஏனைய கொத்மலை, வலப்பனை,
ஹங்குராங்கத்தை ஆகியன முறையே பூண்டுலோயா, ராகலை, ஹேவாஹெட்ட என்ற மூன்று
பிரதேச செயலகங்களால் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டபோதும்
பெரும்பான்மையினரின் அபிலாசைக்கு ஏற்றாற்போல் வலப்பனை பிரதேச செயலகம்
நில்தண்டாஹின்ன பிரதேசத்திலேயே இயங்கி வருகின்ற நிலையில் மற்றுமொரு பிரதேச
செயலகமும் நில்தண்டாஹின்ன, வலப்பனை பிரதேசங்களை அண்டிய பிரதேசத்திலிலேயே
பலவந்தமாக அமையப்பெற திட்டமிடப்பட்டிருப்பது முக்கியமாக கவனத்திற்கொள்ளப்பட
வேண்டியது. அதுபோலவே கொத்மலை பிரதேச செயலகம் கொத்மலை மற்றும் பூண்டுலோயா என
கோரப்பட்டிருந்த நிலையில் கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு என
திட்டமிடப்பட்டிருக்கின்றது. மலையக தமிழர்களின் அரசியல் இருப்பினை
தக்கவைத்துக் கொள்ளும் நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் தேர்தல் முறை
மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோது இந்த பிரதேச செயலகங்களின் அடிப்படையில்
தேர்தல் தொகுதிகள் வகுக்கப்படலாமென்பதால் இந்த பிரதேச செயலக அதிகரிப்புக்கள்
மேலும் முக்கியம் பெறுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com