கல்வி

நுவரெலியா மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட கினிகத்தேனை மாணவன்

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவன் பசிந்து பாஷித்தரணசிங்க முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் கினிகத்தேனை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன், 196 புள்ளிகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன் அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தை 23 மாணவர்களில் இந்த மாணவனும் ஒருவராவார்.

இதேவேளை, ஹட்டன் – செனன் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான ஆனந்தன் தர்வின் 195 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

மேலும், ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவின் மாணவன் குமார் கிர்திஸ் 194 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button