...
ஆன்மீகம்

நுவரெலியா மாவட்டம்- கெட்டபுலா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்..

நுவரெலியா மாநிலத்தில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
நெஞ்சம் நிறை நிம்மதியுடன் வாழ்வதற்கு உன் அருளே வேண்டுமம்மா
தளர்வின்றி முன்செல்ல ஏற்ற வழி கிட்டிடவே
தாயே உன் காவல் தந்தருள வேண்டுமம்மா..

மலைசூழ்ந்த கெட்டபுலாதனிலே குடிகொண்ட எங்கள் முத்துமாரியம்மா
வளங் கொண்டு வாழ்ந்திடவே உன் கருணை வேண்டுமம்மா
நலம் பெற்று நாம் வாழ்ந்து நல்ல நிலை பெற்றிடவே
தாயே நீ உறுதுணையாயிருந்து உதவிடவே வேண்டுமம்மா..

வனப்பு மிகு சூழலிலே அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா
தேக்கமில்லா நல்வாழ்வு எமக்கருள வேண்டுமம்மா
ஆற்றலுடன் முன்னேறி வெற்றிகளைப் பெற்றிடவே
தாயே ஏற்றவழி காட்ட எமக்கு உன் துணையே வேண்டுமம்மா..

நலந்தந்து அரவணைக்கும் எங்கள் முத்துமாரியம்மா
துணையிருந்து காப்பளித்து எமக்கருள வேண்டுமம்மா
உறுதுணையாயிருந்து உயர்வினைத் தந்திடவே
தாயே உற்ற துணையாய் நீயிருக்க வேண்டுமம்மா..

உலகினைக் காத்தருளும் ஒப்பில்லா பேரருளே எங்கள் முத்துமாரியம்மா
உன்னருளாலே நாம் உயர்வு பெற வேண்டுமம்மா
தமிழர் நாம் இந்நாட்டில் தனித்துவத்தைப் பேணிடவே
தாயே வழிதிறந்து, வழியமைத்து ஆறுதல்தர வேண்டுமம்மா..

ஆற்றலின் திருவுருவே அகிலாண்ட நாயகியே எங்கள் முத்துமாரியம்மா
ஏற்றமுடன் நம் எதிர்காலம் உயர்வு பெற வேண்டுமம்மா
நெஞ்சில் உறுதி பெற்று நிம்மதியாய் வாழ்ந்திடவே
தாயே ஆதரித்து எம்மை அணைத்தருள வேண்டுமம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen