ஆன்மீகம்நுவரெலியாமலையகம்

நுவரெலியா மாவட்டம் வெதமுல்லை கெம்நீதன் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமஹா கும்பாபிஷேகம்

புணருத்தாபன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்


நுவரெலியா மாவட்டம் வெதமுல்லை கெம்நீதன் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணருத்தாபன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இம்மாதம் 11 ம் திகதி புதன்கிழமை காலை 7.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகும்.

12 ம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும் 13 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6.10 மணி முதல் 6.30 மணி வரை வரும் சுப வேளையில் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று அடியார்களுக்கு வீபூதி பிரசாதம்.அன்னதானம் என்பன வழங்கப்படும்.

கும்பாபிஷேக கிரியைகளை பிரதிஷ்டா பிரதமகுரு தெனியாய எனசல்வத்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதமகுரு கிரியாஜோதி ஈசானிய சிவாச்சாரியார் சிவஸ்ரீ.சு.ஐங்கரன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரிய பெருமக்கள் நடாத்தி வைப்பார்கள்.

ஆலய சிற்ப வர்ண வேலைகளை புஸ்ஸலாவை இராமகிருஸ்ணன் ராஜா குழுவினர்கள் மேற் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. கும்பாபிஷேக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் வர்ணனைகளை சாகித்திய விருது பெற்ற இராமன் கேதீஸ்வரன் மேற்கொள்ளவுள்ளார் இவ் குடமுழுக்கு விழாவிக்கு வருகை தந்து அம்மனின் அருட்காடஷத்தை பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கின்றார்கள் ஆலய பரிபாலன சபையினர்கள்.

Related Articles

Back to top button