மலையகம்
நுவரெலியா மாவட்ட அதிபர் ஆசிரியர்களுக்கான செயலமர்வு
நுவரெலியா மாவட்ட அதிபர், ஆசிரியர்களுக்கான செயலமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த செயலமர்வில் அதிபர் ஆசிரியர்களுக்கான பதவியுர்வும் சம்பள திட்ட அதிகரிப்பும் ,புதிய ஆசிரிய பிரமாணக்குறிப்பும் கல்வி மீள் கட்டமைப்பும் , மற்றும் நடைமுறையில் அதிபர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் (விடுமுறை ,பென்சன்,இடமாற்றம், தடைதாண்டல் ,…அக்ரகார,சம்பள நிலுவை) போன்ற விடயங்கள் பற்றி விபரிக்கப்படவிருக்கின்றன.
இந்த செயலமர்வானது 31.03.2018 அன்று சனிக்கிழமை புனித சவேரியர் கல்லூரி ,நுவரெலியாவில் காலை 09 மணிக்கு இடம்பெறுமென இலங்கை ஆசிரியர் சங்க நுவரெலியா மாவட்ட செயலாளர் வே .இந்திரசெல்வன் குறிப்பிட்டுள்ளார்.