சினிமாநுவரெலியாமலையகம்

நுவரெலியா மாவட்ட இசைக் கலைஞர்கள் ஒன்றியத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு …

கொரோணா தொற்று நோய் காரணமாக மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். முக்கியாமாக கலைஞர்கள் சரியாக நிகழ்ச்சிகள் கிடைக்காமல் மிக மோசமான சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற சூழலில் நுவரெலியா மாவட்ட இசைக் கலைஞர்கள் ஒன்றியத்தினால் நத்தார் பண்டிகை கொண்டாடும் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.

இசைக் கலைஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் ராஜ்போரா ,செயலாளர் கேதீஸ்வரன் வடிவேல் ரமேஸ் ஆகியோர் குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

கடந்த தீபாவளி பண்டிகையின் போதும் இவ் ஒன்றியத்தால் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button