அரசியல்விளையாட்டு

நுவரெலியா மாவட்ட கிரிக்கட் சம்மேளனத்தினால் கடின பந்து பயிற்சி பெறுவதற்கான Met வழங்கிவைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட கிரிக்கட் சம்மேளனத்தினால் இன்று கடின பந்து பயிற்சி பெறுவதற்கான Met தெரிவுசெய்யப்பட்ட மைதானங்களுக்கு நுவரெலிய சினிசிட்டா மைதானத்தில் வழங்கிவைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சரும் நுவரெலியா மாவட்ட கிரிக்கட் சம்மேளன தலைவருமான திரு C.B. ரத்னாயக்க அவர்களும் சம்மேளனத்தின் செயலாளர் திரு ஜெகத் ஜெயசுந்தர அவர்களும் சம்மேளன பொருளாளர் திரு பிரபாகரன் அவர்களும் மற்றும் நுவரெலியா மாவட்ட பயிற்றுவிப்பாளர்களும் கலந்துக் கொண்டனர்.

இவ் நிகழ்வில் நோர்வூட் மைதானம், ஹட்டன் டன்பார் மைதானம்,DMCC மைதானம்,ராகல, ஹங்குராங்கெத்த, HACCமைதானம் மற்றும் நுவரெலியா மைதானங்களுக்கு MET வழங்கிவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சினிசிட்டா மைதானத்தின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மாவட்ட முன்பள்ளி அமைப்பின் விஷேட நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் C.B ரத்னாயக்க, மாநில அமைச்சர் பியால் நிஷாந்தா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, பாலர் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி, பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் அமைச்சர் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபிவிருத்தி குழு தலைவர் S.B.திசாநாயக்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button