செய்திகள்விளையாட்டு
நுவரெலியா மாவட்ட கிரிக்கட் சம்மேளத்தினால் பாடசாலைகளுக்கான கடின பந்து பயிற்சி உபகரணங்கள் வழங்கிவைப்பு.

நுவரெலியா மாவட்ட கிரிக்கட் சம்மேளத்தினால் பொரமடுல்ல மற்றும் தியதிலக மகா வித்தியாலயம் ஹங்குராங்கெத ஆகிய பாடசாலைகளுக்கான கடின பந்து போட்டியில் ஈடுபடுவதற்கான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரும் நுவரெலியா மாவட்ட கிரிக்கட் சம்மேளன தலைவர் திரு. C.B.ரத்னாயக மற்றும் செயலாளர் திரு. ஜெகத் ஜெயசுந்தர ஆகியோரின் மூலமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்படத்தக்கது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் மிக முக்கிய மைதானங்களில் கடின பந்து வலைப்பயிற்சிக்கான அபிவிருத்தி வேலைகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.