மலையகம்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமானின் தாயார் காலமானார்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தாயாரும், அமரர் ராமநாதன் தொண்டமான் அவர்களின் மனைவியுமான ராஜேஸ்வரி ராமநாதன் அவர்கள் தனது 76ஆவது வயதில் இன்று இந்தியாவில் காலமானார்.
சுகவீனம் காரணமாக, இந்தியா – பட்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று மாலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.