செய்திகள்

நுவரெலியா மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது..

நுவரெலியா மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்றைய தினம் பிரதேச செயலாளர் விதுல சம்பத் தலைமையில் நுவரெலியா பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது நுவரெலியா பிரதேச செலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுத்து வருகின்ற அபிவிருத்தி மற்றும், குறைப்பாடுகள் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் தலவாக்கலை, லிந்துலை நகர சபை, கொட்டகலை, நுவரெலியா, அக்கரபத்தனை,ஆகிய பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள்  ,நகரங்கள், வைத்தியசாலை போன்றவற்றில் நிலவும் அபிவிருத்தி குறைப்பாடுகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு அதிகாரிகளினால்  கொண்டு வரப்பட்டது.

இதன் போது இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி தொடர்பிலான இவ்விடயங்களை  பரீசிலனை செய்து நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பது, மற்றும் அவசர நிலைமைகளின் போது எவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த  ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், பிரதேச செயலாளர் விதுல சம்பத், நுவரெலியா மாநகர முதல்வர் சந்தலால் கருணாரத்தின உள்ளிட்ட பிரதேச சபைகளின் தலைவர்கள், அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com