செய்திகள்

நுவரெலியா மாவட்ட 15 வயதிற்கு கீழான  கடின பந்து அணியில்   மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் இருவர் தெரிவு

நுவரெலியா மாவட்ட 15 வயதிற்கு கீழான  கடின பந்து அணியில்   மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் (தேசிய பாடசாலை) இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்றுவிப்பாளர் மோகன் அவர்களுடன்  சூரியவேவ மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

டில்சான் மற்றும் ரிசாந்தன் ஹட்டன் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் (தேசிய பாடசாலை)  இரண்டு மாணவர்களாவர். 
ஹட்டன் பிரதேசத்திலிருந்து  இவர்கள் மட்டுமே கடின போட்டிக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும். 
இதேவேளை நுவரெலியா holi trinity பாடசாலையிலிருந்து சிமியோன் மற்றும் கோபிகிருஸ்ணா இரு  மாணவர்களும் இவர்களுடன் சேர்ந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார் கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


சென்.ஜோசப் கல்லூரியின்
 மாணவர்களை  ஊக்கப்படுத்த பழைய மாணவர் சங்கம் மூலம் பூரண நிதி அனுசரணை வழங்கப்பட்டுள்ளது. 
பாடசாலை அதிபர் மற்றும் இவர்களின் முயற்சியில் பங்கெடுத்த  ஆசிரியர் பெற்றோருக்கும் நன்றி தெரிவிப்பதோடு  இவர்களின் எதிர்காலம் சிறக்க பழைய மாணவர் சங்கம்  வாழ்த்துக்களை 
தெரிவித்துள்ளது. 

Related Articles

Back to top button