...
செய்திகள்

நுவரெலியா- மூன்று மாணவர்ளை மோசமாக தாக்கிய ஆசிரியர்கள்

மூன்று மாணவர்ளை மோசமாக தாக்கிய ஆசிரியர்கள் – மாணவர்கள் வைத்தியசாலையில
நுவரெலியா கோட்டம் ஒன்றுக்கு கீழ் இயங்கும் பாமஸ்ட்டன் பிரதேசத்தில் தமிழ் பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் சாதாரண தரம் பரீட்சை பெற உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் கூட்டிணைந்து தாக்கியதால் அதில் பலத்த காயங்களுக்கு உள்ளான மூன்று மாணவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இவ் மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர். இவ் தாக்குதல் தொடர்பாக தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு சென்றவர்களுக்கு தாக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விபரம் தெரியாததால் திருப்பி அனுப்பப்பட்டன . மாணவர்களை தாக்கிய ஆசிரியர்களின் சரியான பெயர் விபரங்களை சேகரித்து வரும் படி தலவாக்கலை பொலிஸார் கூறினர்.
இவ்வாறு பாடசாலை மாணவர்களை ஆசிரியர்கள் தாக்குவதற்கான காரணம் என்னவென்று தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் கொந்தழிக்கின்றனர். மூன்று மாணவர்கள் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது
 செ.திவாகரன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen