...
சமூகம்

நுவரெலியா ரோட்டரி கழகம், IPL சிறுநீரக கற்களை துண்டுகளாக்கும் இயந்திரத்தை நுவரெலியா தேசிய வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியது.

நுவரெலியா ரோட்டரி கழகம்,  ரூபாய்1.2 மில்லியன் பெறுமதியான IPL சிறுநீரக கற்களை துண்டுகளாக்கும் இயந்திரத்தை நுவரெலியா தேசிய வைத்தியசாலைக்கு  நன்கொடையாக வழங்கியது. இது  யுஆர்ஓ-அறுவை சிகிச்சை சத்திரசிகிச்சை பிரிவில் இணைக்கப்பட்டுள்ள Genitourinary Surgeonஇன் வேண்டுகோளுக்கு இணங்க பூர்த்திசெய்யப்பட்டது. யுஆர்ஓ-அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வந்தாலும், அந்த இயந்திரம் இல்லாததால் அறுவை சிகிச்சை நிபுணர்களால் சிறுநீரக கற்கள் சமந்தமான  அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. கடந்த காலங்களில் நோயாளர்கள் கண்டிக்கு மாற்றப்பட்டனர்,  தற்போது நுவரெலியா மாவட்ட நோயாளர்கள் கொரோனா தொற்று நோயினால் கண்டிக்கு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எவ்வாறாயினும், வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளை கருத்திற்கொண்டு, நுவரெலியா ரோட்டரி சங்கம் இந்த மாவட்டத்தில் பல நோயாளிகளின் நலனை கருதி இந்த  இயந்திரத்தை வழங்க முன்வந்துள்ளது.
ரோட்டரி இலங்கை  3220 மாவட்ட ஆளுநர் அருணி மலலசேகர அவர்களினால் நுவரெலியா ரோட்டரி சங்க உறுப்பினர்களுடன் இணைந்து வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் மகேந்திர செனவிரத்னவிடம் இயந்திரம் 28 நவம்பர் காலை 10 மணிக்கு கையளிக்கப்பட்டது. இந்தத் இயந்திரத்துக்கு  ஆஸ்திரேலியாவின் பொறியாளர்கள் தொண்டு நிதியம் நிதியளித்தது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen