செய்திகள்

நுவரெலியா வாரச்சந்தையில் கைவிடப்பட்ட வயதான மூதாட்டி!

நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள வாரச்சந்தையில் 75 வயதான தாய் ஒருவர் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூதாட்டியின் பராமரிப்பாளர் தொடர்பாக எதுவும் சொல்லாத தாய், தான் நுவரெலியாவில் மகஸ்தோட்ட பகுதியில் வசித்தாகவும் நுவரெலியா லபுக்கலையில் வசித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள வாராந்த சந்தை வளாகத்தில் பாதுகாவலர் இல்லாமல் வயதான தாய் ஒருவர் இருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களால் பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட தகவலின் பேரில் நுவரெலியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வயதான தாய் தொடர்பாக அடையாளத்தை உறுதி செய்து கொள்வதற்காக நுவரெலியா பொலிஸாரினால் விசேட குழு ஊடாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button
image download