அரசியல்நுவரெலியாமலையகம்

நுவரெலியா விவசாயிகளை பாதுகாக்கும் நடவடிக்கை..

நுவரெலியா விவசாயிகளை பாதுகாக்கும் வண்ணம் வர்த்தக அமைச்சும் விவசாய அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று (27) காலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கும் இடையிலான பேச்சுவார்ததை ஒன்று நுவரெலியா பிளக்பூல் விருந்தகத்தில் இடம்பெற்றது.

இதன்போது நுவரெலியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வரையறுக்கப்பட்ட அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கொழும்பு மெனிங் சந்தையின் வியாபாரிகள் சங்கத்தினதும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்க தலைவருமான அருணசாந்த ஹெட்டியாராச்சி நுவரெலியாவின் மரக்கறி மொத்த விற்பனை வியாபாரிகளான யாதவசிவம் சந்தியராஜன் குணசேகரன் குமாரசிங்ஹ கிறிஸ்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடல் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

இதன்போது நாங்கள் முக்கியமாக இந்த அரசாங்கம் உள்நாட்டு வியாபாரிகளையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பது தொடர்பாக எங்களுடைய நன்றிகளை தெரிவித்ததுடன் அதே நேரம் தற்பொழுது நுவரெலியா மாவட்டத்திலும் ஊவாவிலும் உருளைக்கிழங்கு அறுவடை நடைபெறுகின்றது இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் உருளைக்கிழங்கு இறக்குமதியை நிறுத்த வேண்டும் அல்லது இறக்குமதிக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் இது தொடர்பாக தான் கொழும்பு சென்றவுடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் எதிர்காலத்தில் உள்ளுர் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் வர்த்தக அமைச்சும் விவசாய அபிவிருத்தி அமைச்சும் இணைந்து சில செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.இது தொடர்பாக எதிர்வரும் காலங்களில் நாங்கள் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொள்ள இருக்கின்றோம்.

இதன்போது விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சில தீர்மானங்களை எடுக்க முடியும்.அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம்.இதன்போது நாங்கள் விவசாயிகளுடனும் வர்த்தகர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு அதற்கு ஏற்ற வகையில் ஒரு தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் பந்துலை குணவர்தன தன்னிடம் தெரிவித்ததாகவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-மலையக நிருபர் தியாகு-

Related Articles

Back to top button