செய்திகள்

நுவரெலியா வைத்தியசாலையில் அடையாளங் காணப்படாத 11 சடலங்கள் ..

டி,சந்ரு

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா பேரிடர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 11 பேரின் சடலங்கள் தகனம் செய்ய முடியாமல் தேங்கியிருப்பதாக மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாகஇன்று (30) இதில் சுகாதார அதிகாரிகள்  தெரிவித்துள்ளதாவது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ,கொத்மலை,நுவரெலியா,வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேச செயலக பிரதேசங்களில் இயங்கும் 13 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு அங்கு பரிசோதணை மூலம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு இவ் வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த (28) ஆம் திகதி திகதி முதல்  (30) வரை 11 கொரோனா உயிரிழப்புகள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சம்பவித்துள்ளது.
இவ்வாறு சம்பவித்துள்ள கொரோனா சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இதே நிலையில் இறந்தவரின் உடலை உறவினர்கள் அடையாளம் காணாதால் தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

Related Articles

Back to top button