செய்திகள்நுவரெலியாமலையகம்

நுவரெலியா – ஹவாஎலியா சிறுவர் இல்லத்தில் 37 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று …

டி சந்ரு

நுவரெலியா – ஹவாஎலியா, பெயிண்டர் இல்லம் உள்ள சிறுவர் இல்லத்தில் உள்ள  37 சிறுவர்களுக்கும் அங்கு பணியாற்றும் 08 ஊழியர்களுக்கும், இன்று (05), கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த சிறுவர் இல்லத்தில், எட்டு சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட து. இதையடுத்து, மிகுதியாக இருந்த 40 சிறுவர்களும் இல்லத்தின் ஊழியர்களும், அந்த சிறுவர் இல்லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 37 சிறுவர்களுக்கும் அங்கு பணியாற்றும் 8 ஊழியர்களுக்கும், இன்று (05), கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களும், ஊழியர்களும் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பவும் குறித்த சிறுவர் இல்லத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிராந்திய சுகாதார அதிகாரி கூறினார்.

Related Articles

Back to top button