நுவரெலியாமலையகம்

நுவரெலிய மாவட்டதில் அனைத்து மக்களுக்குமான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை..

வனஜீவி மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி ரத்னாயக அவர்களின் வேண்டுகோளுக்கினங்க நுவரெலிய மாவட்டத்தில் தற்போது கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடு துரிதமாக இடம்பெற்று வருகிறது.

இதில் முதல் கட்டமாக நுவரெலிய மாவட்டத்தில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளில் முதல் நிலை சேவையாளர்கள் 9000 பேருக்கும், 60வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பாக அமைச்சரின் ஊடக பிரவு தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் இனிவரும் இரண்டு வாரங்களுக்கு பிறகு நுவரெலிய மாவட்டதில் அனைத்து மக்களுக்குமான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும் அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சன் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button