...
செய்திகள்

நுவரேலியா அருள்மிகு  கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் 

மலை சூழ்ந்த திருவிடத்தில் எழுந்தருளும் வேலாயுதா
மகிழ்ச்சி பொங்க நாம் வாழ உற்றதுணை இருப்போனே 
துன்பம் தரும் தீய நிலையகற்றியெமைக் காப்போனே
அண்டிவரும் உன்னடியார் உள்ளங்களில் எழுந்தருள்வாய் 
திக்கெங்கும் அருள் பொழிந்து நல்லருளைத் தருவோனே 
தரணி யெங்கும் காவல் செய்து துணைசெய்யும் பேரருளே 
தேன் தமிழின் காவலனாய் மூலவனாய் இருப்போனே
அணைத்து அருளளித்து நன்மை செய்ய எழுந்தருள்வாய் 
அழகுமயில் தனிலிருந்து அருள் வழங்கும் உமை மகனே
கதிரமலை மீதமர்ந்து கருணை செய்யும் மாமணியே 
கருணை முகம் கொண்டவனே கணபதியின் இளையவனே
துணிவு தந்து எழுச்சிதர விரைந்து நீ எழுந்தருள்வாய் 
கந்தா என்றழைத்தால் கடுகி வந்து அருள்வோனே 
உடனிருந்து வளமளித்து ஆறுதலைத் தருவோனே 
உடனிருக்கும் தேவியரின் ஆசியையும் அளிப்போனே 
மனமுருகிப் பணியுமெமக்கு உதவிடவே எழுந்தருள்வாய் 
நுவரேலியா மாவட்டத்தின் இராகலையில் இருந்தருளும் திருமுருகா 
வலிமை தந்து எம்வாழ்வை வளமடையச் செய்வோனே
கூடிவரும் நன்மையெல்லாம் எமைவந்து அடைந்திடவே 
நித்தம் உன்னடி பணியும் எமைக்காக்க எழுந்தருள்வாய் 
போற்றித் தொழும் எஙகளுடனிருக்கும் கதிர்வேலா
என்றுமுன் துணையை வேண்டிநகற்போர் மனங்களிலே உறைவோனே 
அறிவு தந்து, ஆற்றல் தந்து ஆறுதலை அளிப்போனே 
திருவடியைப் பற்றிநிற்கும் எம் குறைகளைய எழுந்தருள்வாய். 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen