...
செய்திகள்

நுவரேலியா- அருள்மிகு காயத்திரி பீடம் இலங்கேஸ்வர் திருக்கோயில் 

நுவரேலியா மலையிருந்து காத்தருளும் பெருமானே 
நமது நலன் காத்தருள கருணை செய்ய வேண்டுமைய்யா 
உன்னருளால் நாம் என்றும் அமைதிபெற்று 
மேன்மையுற ஆசியை நீ தாருமைய்யா 
 
இலங்காதீஸ்வரத் திருத்தலத்தில் உறைந்தருளும் பெருமானே 
இப்புவியில் மகிழ்ச்சியுடன் வாழ வழி வேண்டுமைய்யா
நன்மைகள் நிறைந்துவிட நாடு அமைதி பெற்று 
உன்னத நிலையடைய ஆசியை நீ தாருமைய்யா 
அதியுயர்ந்த பெருமை மிகு காயத்திரி பீடம் உள்ளுறையும் பெருமானே 
துன்பம் நீங்கிவிட உன்துணையே வேண்டுமைய்யா 
மனநிறைவு கொண்டு நாம் மகிழ்ச்சி பெற்று 
உயர் நிலையை அடைவதற்கு ஆசியை நீ தாருமைய்யா 
அண்ட சராசரங்களையும் அசைக்கின்ற பெருமானே 
அச்சமின்றி வாழும் நிலை யெமக்கருள வேண்டுமைய்யா 
அமைதியுடன் இம்மண்ணில் உரிமை பெற்று 
இன்பமுடன் நாம் வாழ்வதற்கு ஆசியை நீ தாருமைய்யா 
தக்கனின் திமிரடக்கி தலைநிமிர்ந்து நின்றவனே பெருமானே 
தலைதாழா வாழ்வடையவுன் அருளே வேண்டுமைய்யா 
தொல்லைகள் அண்டாத திடவாழ்வை நாம் பெற்று 
தூய மனத்தினராய் வாழ்வதற்கு ஆசியை நீ தாருமைய்யா 
வாழ நல்ல வழிகாட்டி வாழ வைக்கும் பெருமானே 
வெற்றிகள் நமையணைக்க மனநிறைவு தர வேண்டுமைய்யா 
வீரமிகு வாழ்வெழுச்சி நாம் பெற்று 
இப்புவியில் நிம்மதியாய் வாழ ஆசியை நீ தாருமைய்யா. 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen