செய்திகள்

கொட்டகலை- அருள்மிகு முத்து விநாயகர் திருக்கோயில்…

கொட்டகலை நகரினிலே கோயில் கொண்ட விநாயகனே
நன்மைகள் பெருக்கியெம்மை நலம் கொள்ளச் செய்திடுவாய்
அல்லல் படுவோர்க்கு ஆறுதல் தருவோனே
எம்குறை தீர்த்திடவே விரைந்து வந்திடய்யா
 மலை சூழ்ந்த திருவிடத்தில் வீற்றிருக்கும் விநாயகனே
மனக்கவலை இல்லாமல் வாழவழி செய்திடுவாய்
துன்பங்கள் போக்கி துணையாயிருப்போனே
எம் நலன் பேணிடவே விரைந்து வந்திடய்யா
நுவரேலியா மாவட்டத்தில் குடி கொண்ட விநாயகனே
நித்தம் உன்னடியார் நிம்மதிக்கு உதவிடுவாய் 
அச்சம் அகற்றியெமக் கமைதி நிலை தருவோனே
ஆறுதல் எமக்களிக்க விரைந்து வந்திடய்யா
கல்விச் செல்வம் வழங்குமகம் முன்கொண்ட விநாயகனே
நேர்மை மிகு நல்வாழ்வு நிலைக்க அறிவளிப்பாய்
நடுநிலைமை நின்று நன்மைகள் செய்வோனே
நம்முரிமை உறுதி செய்ய விரைந்து வந்திடய்யா
ஆவணி சதுர்த்தியிலே தேரில் வரும் விநாயகனே
தளர்வில்லா வெற்றிகளை அடைய வழி செய்திடுவாய்
சங்கடங்கள் தடுத்து அமைதியையே தருவோனே
சிந்தையிலே இருந்தெம்மை சீர்செய்ய விரைந்து வந்திடய்யா
உன்னருளால் அனைத்துலகும் உய்ய வேண்டும் விநாயகனே
உற்றவரும், ஊரவரும் நலம் பெறவே அருளிடுவாய்
தூய நல்ல வாழ்வுக்குத் துணையாக இருப்போனே
துணிவு கொண்டு நாம் வாழ விரைந்து வந்திடய்யா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen