செய்திகள்

நுவரேலியா- இரம்பொடை அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்

அகந்தையை அழிக்கும் ஆஞ்சநேயர்- நம்
குறைகளைப் போக்கக் கோயில் கொண்டார்
துன்பங்கள் அகற்றி நிம்மதி நிலைக்க
அஞ்சனை மைந்தன் வந்துவிட்டார்..

அச்சம் தீர்க்கும் ஆஞ்சநேயர்- நம்
ஆற்றலைப் பெருக்க வந்துவிட்டார்
அகந்தையை அடக்கி அன்பைப் பெருக்கிட
வாயுகுமாரன் தோன்றிவிட்டார்..

அரக்கரை மாய்த்த ஆஞ்சநேயர்- நம்
வளங்களைப் பெருக்கிட மனங்கொண்டார்
வெற்றிகள் வழங்கி வலிமை தந்திட
இராமதூதர் எழுந்துவிட்டார்..

சஞ்சலம் களையும் ஆஞ்சநேயர்- நம்
தடைகளைத் தகர்க்க வந்துவிட்டார்
அமைதி நிலைத்து ஏற்றம் வழங்கிட
காருண்ய சீலன் மனங்கொண்டார்..

காக்கும் தெய்வம் ஆஞ்சநேயர்- நம்
துணையாய் இருக்க குடிகொண்டார்
இரம்பொடை நற்பதி நின்றருளி
எங்கள் காவலாய் நின்றிருப்பார்..

நம்பிக்கை நாயகன் ஆஞ்சநேயர்- நம்
சித்தம் சீர்பெற வழிசெய்வார்
துணிவுடன் வாழ்வை எதிர்கொள்வோம்
நிம்மதி நிச்சயம் நமக்குண்டு.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button