ஆன்மீகம்

நுவரேலியா- இராகலை, அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்

இராகலை, அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்

 

உயர்ந்த மலை மீதினிலே காட்சி தரும் ஐயா
உள்ளங்கள் அமைதி பெற அருள வேணும்
இன்பம் நிறைவாழ்வு வந்து நாளும் சேர
அருளிடைய்யா இராகலையமர் கதிர்வேலா

அழகுமிகு திருக்கோயில் உறையும் ஐயா
அன்புடனே அமைதியாக வாழ வேணும்
அச்சமில்லா நிலை வந்து நாளும் சேர
அருளிடைய்யா இராகலையமர் கதிர்வேலா

வேல் தாங்கி காப்பளிக்க வந்த ஐயா
வேதனைகள் நெருங்காது காக்க வேணும்
வெற்றிகள் நம்மை வந்து நாளும் சேர
அருளிடைய்யா இராகலையமர் கதிர்வேலா

இருமருங்கும் அன்னையருடன் தோன்றும் ஐயா
இதயமதில் உறைந்தெம்மைக் காக்க வேணும்
இடர்களண்டா உயர் வாழ்வு நாளும் சேர
அருளிடைய்யா இராகலையமர் கதிர்வேலா

தமிழ்த் தெய்வம் எனும் பெருமை கொண்ட ஐயா
தளர்வில்லா மனவுறுதி தரவேணும்
கறைபடியா நல்வாழ்வு நாளும் சேர
அருளிடைய்யா இராகலையமர் கதிர்வேலா

சூரபத்மன் கொடுமைகளை அடக்கிய ஐயா
சூது கொண்ட மனத்தினரை அடக்க வேணும்
தீதில்லா பெருவாழ்வு நாளும் சேர
அருளிடைய்யா இராகலையமர் கதிர்வேலா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button