செய்திகள்

நுவரேலியா- சீத்தாஎலிய- சீதையம்மன் திருக்கோயில்


அன்னையவள் திருப்பாதம் பதிந்த இடம்
ஆஞ்சநேயர் கால்பதிந்த புனித இடம்
சங்கடங்கள் தீர்த்தருளும் சக்தி இடம்
சீதையம்மன் கோயில் கொண்ட திருக்கோயில்.

மலையகத்தின் மத்தியமைந்து அருளும் இடம்
மனவலிமை தந்து வலுவேற்றுமிடம்
இராமபிரான் சக்தியன்னை வாழ்ந்த இடம்
சீதையம்மன் கோயில் கொண்ட திருக்கோயில்.

நல்லவர்கள் நாடிவந்து வணங்கும் இடம்
நலன்கள் பல நம்மைவந்து சேரும் இடம்
மறம் களைந்து அறம் பெருகி நிற்கும் இடம்
சீதையம்மன் கோயில் கொண்ட திருக்கோயில்.

விண்ணவரும் போற்றி நிற்கும் புண்ணிய இடம்
வீரமங்கை தவமிருந்த கருணை இடம்
மனஅமைதி தருகின்ற தூய இடம்
சீதையம்மன் கோயில் கொண்ட திருக்கோயில்.

அதர்மத்தை அழித்திட்ட தர்ம இடம்
ஆணவத்தை அடக்கி எம்மை காக்கும் இடம்
பழம் பெருமை கொண்ட அன்னை இடம்
சீதையம்மன் கோயில் கொண்ட திருக்கோயில்.

 

 

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com