செய்திகள்

நுவரேலியா மாவட்டத்திற்கு மேலும் 50000 தடுப்பூசிகள்…

மத்திய மாகாண கொவிட் 19 தடுப்பு குழு கூட்டம் இன்று மத்திய மாகாண ஆளுநர்
அதிமேதகு லலித் யூ கமகே தலைமையில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் தொடர்பாக பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர்
நாயகமமும் பாரத் அருள்சாமிஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நுவரேலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டமாக தலா 50000
தடுப்பூசிகள் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு
முன்னுரிமை வழங்க முடிவெடுக்கபட்டதாகவும் தெரிவித்தார் . மேலும் இதுவரையில்
மத்திய மாகாணத்தில் 725 மரணங்கள் கொவிட் தொற்றின் காரணமாக எற்றப்பட்டுள்ளன
எனவும் அதில் மெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்ப்பட்டோரே ஆவர். இதுவரையில்
மத்திய மாகாணத்தில் 28723 தொற்றினால் பாதிக்கபட்டுள்ளனர் எனவும் எமது
வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 50000 தடுப்பூசிகள் நுவரேலியா மாவட்டத்திற்கும்
50000 தடுப்பூசிகள் மாத்தளை மாவட்டத்திற்கும் கிடைக்கும் நிலையில் 60 வயதுக்கு
மேற்றப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்க கூடியதாக அமையும் எனவும் அவர்
தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுகாதார பிரிவினர் நுவரேலியா மாவட்டத்தில்
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மக்கள் ஆர்வமாக பங்கேற்றத்துடன் அவர்களுக்கு
தேவையான விழிப்புணர்வு போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்ய
உதவிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர். மேலும்
இவ் வாரத்தில் இத்தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்க பட்ட போதும் சுகாதார
ஊழியரகளின் போராட்டம் காரணமாக சற்று தாமதமாகுவதாகவும் தெரிவித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பாரத் தடுப்பூசிகள் வழங்குவதற்க்கான அனைத்து
வசதிகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வழங்க நாம் முன்நின்று
செயல்படுவோம் அதே வேலை எமது பிரஜாஷக்தி கொவிட் தடுப்பு செயலணி ஊடாக
போக்குவரத்து ஆவணங்கள் தயார்படுத்தல் அரச சுகாதார மற்றும் பாதுகாப்பு
அதிகாரிகளுடன் நாம் செயல்பட தயாராக உள்ளோம் என தெரிவித்தார். அதே வேளையில் பி
சி ஆர் பரிசோதனைகளில் ஏற்படும் காலதாமதங்களை குறைக்குமாறும் வேண்டுகோள்
விடுத்தார்.

இக் கூட்டத்தில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க
அமைச்சின் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத்
அருள்சாமி, மாத்தளை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நாளக கோட்டேகொட கலந்து
கொண்டதுடன் கண்டி நுவரேலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட செயலாளர்கள் மத்திய மாகாண சுகாதார
பணிப்பாளர் உட்பட வைத்திய பணிப்பாளர்கள், இராணுவ கட்டளை தளபதி பிரதி பொலிஸ்
அதிபர் என பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button