...
செய்திகள்

நூலக நிறுவனத்தின் இணையவழி கலந்துரையாடல் ..

நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரில் 17 ஆவது நிகழ்வாக “இலங்கைப்
பண்பாட்டில் பஞ்சாங்கங்கள்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் எதிர்வரும்
சனிக்கிழமை (2021-09-25) அன்று இரவு 7.30 மணிக்கு (இலங்கை நேரம்)
நடைபெறவுள்ளது.

பஞ்சாங்கங்களின் வரலாற்று ரீதியான செல்வாக்கு, விஞ்ஞானமும் பஞ்சாங்கங்களும்,
சமூக பண்பாட்டியலில் பஞ்சாங்கங்களின் முக்கியத்துவம் போன்றவற்றை பேசுபொருளாகக்
கொண்டு கலந்துரையாடல் நிகழவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு.
சர்வேஸ்வர ஐயர் பத்மநாபன் அவர்கள் நூலகக் கலந்துரையாடலை நிகழ்த்த உள்ளார்.
வளவாளர் கனடா , இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ‘செந்தமிழ் ஆய்வுச் சிகரம்’,
‘வேதாகம வித்தகர்’ போன்ற விருதுகள் பலவற்றை பெற்றுள்ளதுடன் யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

நிறுவன ஆளுகைச் சபையின் சார்பில் திரு பிரசாத் சொக்கலிங்கம் அவர்கள்
ஒருங்கிணைப்பாளராக செயற்பட உள்ளார்.

நூலக நிறுவனமானது அனைவரையும் பங்குபற்றி பயனுறும்படி அன்புடன் அழைக்கின்றது

Related Articles

Back to top button


Thubinail image
Screen