உலகம்செய்திகள்

நேபாளத்திற்கு புதிய பிரதமர் நியமனம்

நேபாள உச்சநீதிமன்றம் அந்நாட்டு பாராளுமன்றத்தை மீண்டும் ஸ்தாபித்து புதிய பிரதமர் ஒருவரை 2 நாட்களில் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் ஷெர் பஹ்தூர் தேவ்பா (Sher Bahadur Deuba) நேபாளத்தின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார். கடந்த மே மாதம் 22 ம் திகதி 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள பாராளுமன்றம் அந்நாட்டு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரியினால் கலைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஓலியின் பரித்துரைக்கு அமையவே அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நவம்பர் 12 மற்றும் 19 ஆம் திகதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்நாட்டு எதிர்க்கட்சி இத்தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தியதுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானதென உச்சநீதிமன்றம் நேற்று தீர்மானித்தது. முன்னாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி பாராளுமன்றத்த்pல் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. புதிய பிரதமர் ஷெர் பஹ்தூர் தேவ்பா இதற்கு முன்னர் 4 தடவைகள் நேபாள பிரதமராக பதவி வகித்துள்ளார். நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஷெர் பஹ்தூர் தேவ்பா இந்திய ஆதரவாளர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய பிரதமரின் கீழ், கடந்த காலத்தில் இந்தியாவுடன் ஏற்பட்ட முறுகல் நிலை நீங்கி பல மாதங்களாக நிலவி வந்த அரசியல் ஸ்த்திரமற்ற நிலையும் முடிவுக்கு வருமன தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button