...
உலகம்

நேபாளத்தில் கடும்மழை: மண்சரிவில் சிக்கி 48 பேர் பலி; 31பேரைக் காணவில்லை

நேபாளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த இடைவிடாத மழையால் அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் ஆங்காங்கே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 31பேரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக கடும்மழை வாய்ப்புள்ளதாகவும், கிழக்குப் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் காத்மாண்டு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

கடும்மழையால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளன. மோசமான வானிலை காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

48 died, 31 missing in Nepal's flood and landslides - OrissaPOST

Related Articles

Back to top button


Thubinail image
Screen