செய்திகள்

நேற்று மாத்திரம் எத்தனை பேருக்கு சோதனை தெரியுமா ? தகவல் உள்ளே.

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான நேற்று முதலாம் திகதி மாத்திரம்
நாட்டில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் சோதனைகள்
நடத்தப்பட்டுள்ளன.

அதன்படி 14 ஆயிரத்து 600 பி.சி.ஆர் சோதனைகள் நேற்று நடத்தப்பட்டதாக சுகாதார
அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியிலிருந்து இதுவரை நாட்டில் 12 இலட்சத்து 65
ஆயிரத்து 17 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதியே அதிக எண்ணிக்கையிலான பி.சி.ஆர்.
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம் அன்றைய தினம் 17 ஆயிரத்து 425 பி.சி.ஆர். பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com