...
செய்திகள்

நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை காணவில்லை.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெய்கிந்தகம பல்லேகமயில் மாணிக்கக் கல் அகழ்விற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரம் ஒன்றில் காவல் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்த 68 வயதுடைய நபர் ஒருவர் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக தற்காலிக கூடாரத்துடன் பெய்த மழை வெள்ளத்தில் அடித்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த நபரை தேடும் பணிகளில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் பராக்கிரம மாவத்தை 24/3 B எனும் விலாசத்தை உடைய மொஹமட் மொஹைதின் மொஹமட் மிலான் எனும் 68 வயதுடைய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen