அரசியல்செய்திகள்

நேற்றைய பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவு.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான நேற்றைய பேச்சுவார்த்தையும் இணக்கமின்றி நிறைவடைந்து.

இந்த பேச்சுவார்த்தை நேற்றிரவு 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான நிலையில் இரவு 10 முப்பது வரை நீடித்தது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் நபரை தெரிவு செய்வதற்வதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாக அமைந்திருந்தது.

அந்த நோக்கம் நேற்றைய கலந்துரையாடலில் நிறைவு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும், நேற்றைய பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நிலையில் நேற்றைய நாளுக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய அங்கத்தவர்களில் ஒருவரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரமவும் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பேச்சுவார்த்தையின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரித்த அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.
” இந்த பேச்சுவார்த்தை சிறந்த முறையில் நடைபெற்றது. சுமூகமான கருத்துக்கள் பகிரப்பட்டன. மேலும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த பேச்சுவார்த்தையின் பகிரப்பட்ட கருத்துக்கள் வெளிவரும்.”

Related Articles

Back to top button
image download