செய்திகள்
நேவி சம்பத் மீண்டும் விளக்கமறியலில்.!

நேவி சம்பத் என அழைக்கப்படும் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்ப்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு வெள்ளை வேனை பயன்படுத்தி கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பான வழக்கின் 10 ஆவது சந்தேகநபராக முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி குறிப்பிடப்பட்டுள்ளார்.
கொழும்பு – லோட்டஸ் வீதி பகுதியில் கடந்த 13 ஆம் திகதி மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நிதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.