கட்டுரைகல்விநுவரெலியாமலையகம்

நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வயது 54.

பல கல்விமான்களை உருவாக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கும் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வயது 54.

வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பெற்று வீறு நடைபோடும் கணபதி த.ம.வித்தியாலயமானது நோட்டன், கே.பி.என். நிறுவனத்தினரான நல்லுசாமி பரம்பரையினரின் சொத்தாக இருந்த முருகன் தியேட்டர் உரிமையாளர் சமூக நலன் கருதி பாடசாலை நடாத்த இடமளித்தார்.

பின்னர் கணபதி தோட்ட பாடசா லையாக மாற்றம் பெற்றது. நல்லுசாமி பரம்பரையினருடன் நோட்டன், பிரதேச வாழ் கல்வியலாளர்களான திருவாளர் சதீஸ், திருவாளர் செல்வம் குடும்பத்தினர் உட்பட பலரின் முயற்சியால் உருவாகிய கணபதி பாடசாலை பின்னாளில் சீடா திட்டத்தி னூடாக புதிய கட்டிடங்களை கொண்ட அரச பாடசாலையாக பரிணமித்தது.

54 வருட கால வரலாற்றை கொண்ட நோட்டன் கணபதி பாடசாலை அமைவிட சூழல் அதன் எல்லை அதீத அக்கறைக் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு சொத்தாக அந்த பாடசாலை விளங்குகிறது.

இலங்கையின் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட விமல சுரேந்திர நீர் மின் உற்பத்தி நிலையத்தையும் அன்மித்த இப்பாடசாலை பெரும்பான்மை சமூகம் அதிகம் கொண்ட சூழலிலே அமைந்துள்ளது.

எதிர்த்திசையில் லக்ஷபான கினிகத்தேனை, ஹங்கரா ம்பிட்டிய என சிங்கள கிராமங்களைச் சேர்ந்த பகுதியிலமைந்துள்ள கணபதியை வளர்த்தெடுக்க வேண்டிய கடப்பாடு நாம் அனைவருக்கும் உண்டு.

நம் சமூகத்தின் மத்தியில் கல்விப்புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கணபதி பாடசாலையானது தனது 54 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது.

அதிபர் திரு. சிவானந்தராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்
இப்பாடசாலையை வெறுமனே வாழ்த்திவிட்டு மட்டும் சென்று விட முடியாது . கணபதி தமிழ் மகா வித்தியாலயம் உருவாக்கியவர்களின் பெயர் பட்டியல் மிக நீண்டது அவர்களில் சிலர்..

 • அமரர் எஸ்.சதீஸ்
  முன்னாள் மத்திய மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர்
 • திரு.செல்வம், ஓய்வு பெற்ற , உதவி கல்விப்பணிப்பாளர் ஹட்டன் கல்வி வலயம்

*திரு.துரைசிங்கம்
ஆசிரியர் ஆலோசகர் (ஆங்கிலம்) அட்டன் கல்வி வலயம்

*திரு.நரேந்திரன் அதிபர்
அட்டன், பொஸ்கோ கல்லூரி

*திரு.நாகராஜ் – அதிபர்
நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி

*திரு.வீ விநாயகமூர்த்தி சட்டத்தரணி- அட்டன் நீதவான் நீதிமன்றம்.

 • திரு சண்முகலிங்கம் -அதிபர் ,
  வட்டவளை த.வி அட்டன்
 • பிரேமஜோதி -அதிபர்
  பின்னோயா இல.02

*ஸ்டாலின் சிவஞானஜோதி – வளவாளர் –
அட்டன் கல்வி வலயம்

 • திரு. அலெக்ஸாண்டர்- அதிபர்
  லொனக் த.வி

திரு.இளங்கோவன் -பொலிஸ் அதிகாரி …. உட்பட இன்னும் பலர்..,

அதே வேளை நோட்டன், கணபதியில் புலமைப் பரிசில் பரீட்சையில் முதலாவதாக சித்தி பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்தவர் வன்னிச்செல்வன்.
தற்போது தொழிலதிபராக இருக்கின்றார்.

எனவே வரலாற்று முக்கியத்துவமிக்க நோட்டன் கணபதி யை நம் எதிர்கால சமூகத்திற்காக பாதுகாக்கப்பட வேண்டியதே சகலரது பொறுப்பும் கூட.!

இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை பழைய நினைவுகளை மீட்டுப் பார்த்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் இவ்வளவு பெருமைகள் மிக்க ஒரு பாடசாலையாக எங்கள் பாடசாலை இருந்திருக்கின்றது இருந்து கொண்டிருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்கும்போது இன்னும் பெருமையாக இருக்கின்றது இந்த சந்தர்ப்பத்தில் எங்களுக்கு அன்னையாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருந்த எங்கள் அன்பு பாசமிகு அதிபர் கந்தையா அதிபர் அவர்களை என்றும் மறந்து விடமுடியாது இந்தப் பாடசாலையின் வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய ஒரு உந்துசக்தியாக எங்களுடைய கந்தையா அதிபர் அவர்கள் இருந்திருக்கின்றார் எனவே அவரையும் இந்த தருணத்தில் நான் நினைவுபடுத்துவது நான் பெருமை கொள்கின்றேன்.

ஆக்கம் : ராம், தேவா

Related Articles

Back to top button