செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி…

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அனுமதியளித்துள்ளனர். அவ்வாறு செலுத்துவது வேகமாக பரவி வரும் டெல்டா திரிபில் இருந்து மேலும் தற்காத்துக்கொள்ள உதவும் என ஆய்வுசெய்துள்ளனர்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் விடுத்த அறிவுநுத்தலுக்கு அமைவாக பலருக்கு டெல்டா திரிபு எளிதில் தாக்கக்கூடும் என அஞ்சுகின்றனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், புற்றுநோய் மற்றும் மற்ற இணை-நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளமை இதற்கு காரணம். பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் உட்பட பல நாடுகள் இதே போன்ற பரிந்துரைகளைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோய் பரவலுக்கு எதிராக மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என அமெரிக்க சுகாதார தரப்பு அறிவித்துள்ளமை இதுவே முதல்முறை. இந்த நடவடிக்கை மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ள அமெரிக்கர்களை கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விடுபட வைப்பதே இதன் நோக்கம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பணிப்பாளர் ரோச்சல் வேலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முடிவு அதிக ஆபத்துள்ள குழுவிற்கும், சுமார் 3 சதவீத வயது முதிர்ந்த அமெரிக்கர்ககளுக்கு மட்டுமே பொருந்தும். இது நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படும் மக்களுக்கு செலுத்தப்படமாட்டாது என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
image download