செய்திகள்மலையகம்

நோர்வூட்டில் மேலும் 33 பேருக்கு கொரோனா

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் பிரிவில் இன்றைய தினம் 33 பேருக்கு கொவிட் தொற்றுஉறுதி செய்யப்பட்டதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வைத்திய டி.சந்திரராஜன் தெரிவித்தார்.

கடந்த 07 ஆம் திகதி 143 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்ற நிலையில், 33 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களுள் மஸ்கெலியா நகரப் பகுதியில் 25 பேருக்கும், நோர்வூட் நகரப் பகுதியில் 08 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button