செய்திகள்மலையகம்

நோர்வூட்டில் 12 பேருக்கு கொரோனா : வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு.!

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் பிரிவில் இன்றைய தினம் 12 பேருக்கு கொவிட் தொற்றுஉறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நோர்வூட் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்று, சமூர்த்தி வங்கி, மதுபானசாலையொன்று ஆகியன மூடப்பட்டன என்று மஸ்கெலயா பொது சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்.

இதேவேளை, நோர்வூட் ஜனபத கொலனி மரண வீடு ஒன்றில் கலந்து கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், சாமிமலை பகுதியில் 04 பேருக்கும் மஸ்கெலியா பகுதியில் 04 பேருக்கும் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதிதாக மொத்தம் 20 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button