செய்திகள்

நோர்வூட் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு யுவதிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி!

நோர்வூட் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு யுவதிகளுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதென மஸ்கெலிய பொது சுகாதார மேற்பார்வை அதிகாரி பி. ஏ. பாஸ்கரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் கடந்த 11ஆம் திகதி மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் இவர்களுக்கு கொவிட் 19 தொற்றுள்ளதென கடந்த 20 ம் திகதி அறியக்கிடைத்தது.

இதனையடுத்து ஆடை தொழிற்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு அதில் பணி புரியும் 40 யுவதிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், அவர்களுடன் மேலும் 150 பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளரெனவும் எனவும்,
அவர்களிள் 50 பேருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஏனையோருக்கு நாளை அல்லது நாளை மறுதினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக சுகாதார மேற்பார்வை அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் தெரிவித்தார்.

அத்துடன் மஸ்கெலிய புரவுன்சீக் புளும்பீல்ட் தோட்டத்தை சேர்ந்த யுவதி அந்த ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்த வேளையில் அவருக்கு தொற்று உறுதியானதால் அவர் சார்ந்துள்ள 6 குடும்பங்கள் தனிமைப்படுத்தபட்டுள்ளதாகவும். அதே போன்று பொகவந்தலாவ பகுதி உள்ள ஒரு பெண் உட்பட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரெனவும் சுகாதார மேற்பார்வை அதிகாரி பி. ஏ. பாஸ்கரன் மேலும் தெரிவித்தார்.

கௌசல்யா-லிந்துலை

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com