உலகம்

பாகிஸ்தானில் பஸ் விபத்து: 7 பேர் பலி; 28 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து வீழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கிழக்கு சக்வால் மாவட்டத்தில் கராச்சி நோக்கி நேற்று இரவு ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

பஞ்சாப் மாகாணத்தின் கான்வால் மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen